இலங்கையில் இரு பெண்களை ஏமாற்றிவிட்டு தாய்லாந்து சென்ற யாழ். வடமராட்சி கிழக்கைச் சோ்ந்த நபர் ஒருவர் அங்கு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
மேற்படி பெண்களை ஏமாற்றிய நபரான பஞ்சாட்சரம் சுதர்சன் மருதங்கேணியை சொந்த இடமாகக் கொண்டவர்.
2006 ம் ஆண்டில் உடுத்துறையைச் சேர்ந்த அனுஷா சிவசிதம்பரம் என்பவரை 15 இலட்சம் சீர்வரிசையுடன் பதிவுத் திருமணம் செய்து, 2010 ல் தேனிலவன் எனப் பெயர் சூட்டப்பட்ட ஆண்பிள்ளை பிறந்தவேளை, தன் மனைவிக்கு தெரியாமல் 2010 ல் ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் பழகி அவர்களையும் இரு மாதங்களுக்குள் திருமணம் செய்துள்ளார்.
அதில் முல்லைத்தீவு வலைஞர்மடத்தைச் சேர்ந்த பெண்ணான சுகிர்தருபி சுப்பிரமணியம் என்பவரிடம் 18 இலட்சம் ரூபாய் பணமும் 10 பவுண் நகையும் சீர்வரிசையாக வேண்டிக்கொண்டு, கொடிகாமம் குடமியனை சேர்ந்த பெண்ணான சசிகலா சிங்கராஜா என்பவருடன் இலங்கையை விட்டு வெளியேறி தாய்லாந்தில் குடிபுகுந்தனர்.தாய்லாந்தில் அகதியாக விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்களுடைய அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
ஏற்கனவே உள்ள இரு பெண்களும் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவரும் விமான நிலையத்திலே கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணை வழங்கியுள்ளது.
இதுபோன்று எத்தனையோ பெண்கள் ஏமாற்றப்பட்டு வெளியே சொல்லமுடியாத அளவுக்கு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக