புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விபச்சாரிகளிடம் செல்ல வீட்டிலிருந்த நகைகளை விற்ற 14 வயதுச் சிறுவர்கள்!விபசார நிலையத்திற்கு செல்வதற்காக தாய்மாரின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.


மேற்படி சிறுவர்கள், தமது வீடுகள் அமைந்து பகுயில் நகை அடகு பிடிப்பவரிடம் சுமார் 513,475 ரூபாய் பெறுமதியுள்ள தங்க நகைளை, 51,347.5 இற்கு விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் பணத்தில் சிறு தொகையை பீஸா, தந்தூரி போன்ற உணவுகளுக்காக செலவிட்ட மேற்படி சிறுவர்கள் பின்னர் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.

'ஹோர்மோன் சித்தபிரமை'யில் இருந்தவாறு மேற்படி சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நகையின் பெறுமதியில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே மேற்படி சிறுவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
விசாரணை மேற்கொள்ளும்போது அவர்களின் முகத்தில் பிரகாசமான சிரிப்பை பார்க்க முடியும்' என பொலிஸ் பேச்சாளர் ராப் மின்னெட் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு எதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.காலம் எங்கே செல்கிறது, கலாச்சாரம் எங்கே செல்கிறது என்று எல்லாம் கேட்காதீர்கள். வீட்டில் நகை பத்திரமாக இருக்க அதை முதலில் பாருங்கள்... பின்னர் பேசலாம்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top