புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தை சிம்புதேவன் இயக்க உள்ளதாகவும் அதற்காக வடிவேலுவை அணுகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.வடிவேலு கதாநாயகனாக நடித்த 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் மெகா ஹிட்டானதையடுத்து படத்திற்கான 2ம் பாகம்
தயாராக உள்ளது.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் வடிவேலுக்கு இது ஒரு நற்செய்தியாகும்.

இதனடிப்படையில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் 2ம் பாகம் எடுக்கும் முயற்சியில் இயக்குனர் சிம்புதேவன் இறங்கியுள்ளார்.

இது பற்றி இயக்குனர் சிம்புதேவன் கூறுகையில், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நிறைய காட்சிகள் எடுக்க முடியாமல் போனது.

அதை தற்போது கருத்தில் கொண்டே 2ம் பாகத்தை தயார் செய்து வருகிறேன். இது பற்றி வடிவேலுவிடம் பேசியுள்ளேன் என்றும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top