பதுளை – தெமோதர – ஓதும்பே தோட்டத்தில் கணவன் தனது மனைவியை கத்தியால் குத்தி கோடரியால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.இந்த படுகொலை சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.
30 வயதுடைய ராமையா சசிகலா என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டவராவார்.
ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை முற்றியதால் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சடலம் பொலிஸ் பாதுகாப்பில் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை என்பன இடம்பெறவுள்ளன.
பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக