புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

க. பொ. த உயர்தரம் பயில்கின்ற மாணவி ஒருவர் மீது பாலியல் அங்க சேஷ்டை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சர்வதேச பாடசாலை மாணவர்கள் மூவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. களுத்துறை மேலதிக நீதிவான் நாமல் பெரேரா மூன்று மாணவர்களையும் தலா 50000 ரூபாய் காசுப் பிணையிலும், தலா இருவரின் சரீரப் பிணையிலும் விடுவித்து உள்ளார்.

பாடசாலை முடிந்த பிற்பாடு மாணவி ஒருவர் வீட்டுக்கு செல்ல வீதியில் நின்று இருக்கின்றார். அப்போது சைக்கிள்களில் வந்த மூன்று மாணவர்களும் இவரது மார்புகளை தொட்டு அங்கசேஷ்ட்டையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட மாணவி பேருவளைப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆயினும் நீதிமன்றத்தில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் மூன்று மாணவர்களையும் சரியாக அடையாளம் காட்ட மாணவி தவறிவிட்டார். சம்பவம் நடந்த நேரத்தில் தான் பதற்றமாக இருந்ததாகவும், அதனால் தன்னால் அவர்களை சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இம் மூன்று மாணவர்களையும் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top