புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொதுவாக கோழிகள் முட்டைதான் போடுவதைத் தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் கேரள மாநிலம் காசர்கோட்டில் கோழி குட்டி போட்ட அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது.


கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த செருவந்தூர், சீமேனி பகுதியை சேர்ந்தவர் பத்ரன் என்பவரின் மனைவி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ளார். கேரள அரசு சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கிய ஒரு பெட்டைக்கோழி இவர்களது வீட்டில் உள்ளது.

இந்த கோழி தினமும் முட்டையிட்டு வந்தது. ஆனால் அடைகாப்பதே கிடையாது. நேற்று மாலை வீட்டு முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த அந்த கோழி தொப்புள் கொடியோடு ஒரு ‘கோழிக்குட்டியை’ பிரசவித்தது.

தொப்புள் கொடியோடு பிறந்த கோழிக்குட்டியை தாய்க்கோழி கவனிக்காது சென்று விட்டது. வீட்டில் இருந்தவர்கள் அந்த கோழிக்குட்டியை சுத்தம் செய்து வெதுவெதுப்புக்காக துணியில் வைத்து பாதுகாத்தனர்.

அது தற்போது நல்ல நிலையில் உள்ளது. கோழி ‘குட்டி’ போட்ட அதிசயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top