தொலைக்காட்சியில் எந்த சேனல் பார்ப்பது என்ற தகராறில், ஆத்திரம் அடைந்த மனைவி கணவனை வெட்டி கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மத்திய ரஷ்யாவில் உள்ள டுலா நகரில் வசிக்கும் தம்பதிக்குள் தொலைக்காட்சி பார்க்கும் விஷயத்தில் தகராறு ஏற்பட்டது.
மனைவி ஒரு சேனலையும், கணவன் ஒரு சேனலையும் பார்க்க வேண்டும் என்று விரும்பினர். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த மனைவி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து கணவனை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து அந்த பெண்ணை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் பெண் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பொலிசார் கூறினர்.
சம்பந்தப்பட்ட தம்பதியின் பெயர் விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை. இந்த சம்பவத்தால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக