சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பிரதேசங்களில் வீடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிலவி வரும் மோசமான காலநிலையினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
பதுளையில் 30 வீடுகளும், புத்தளத்திலும் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான காற்றினாலேயே வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஹைலெவல் வீதி திம்பிரிகஸ்யாய பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் மரமொன்று வீழ்ந்ததில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கொழும்பு – கண்டி வீதியின் ஜப்பான் நட்புறவு பாலத்திற்கு அருகாமையில் கட்அவுட் ஒன்று வீழ்ந்தத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அதிக மழை வெள்ளம் காரணமாக துன்ஹிந்த பிரதேசத்தின் பிரதான வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தின் பகுதிகளில் கடும் காற்று காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் புயலினால் 35 வீடுகள் சேதம்!
நாட்டின் பல பாகங்களிலும் வீசிய சூறாவளியினால் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. அவ்வாறான பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, ஹைலெவல் வீதியின் திம்பிரிகஸ்யாய சந்தியில் சற்றுமுன் பாரிய மரங்கள் இரண்டு முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியினுடனான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதனால், அதனை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை வீசிய சூறாவளியினால், களுத்துறை, நாகொடை பகுதியில் 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. மாபல்லகம, ஹிக்கடுவ பிரதேசங்களிலும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காலி அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, திக்வெல்ல பகுதியில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரமொன்று முறிந்து விழுந்துள்ளது. அதனை வெட்டி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், கல்லடி, பல்லம, முந்தலம், ஆனமடுவை மற்றும் சிலாபம் பகுதியில் ஊடறுத்துச் சென்ற சூறாவளியினால் பல இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தமையினால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இரத்மலானை கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட கடலரிப்பினால் சுமார் 10 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக