மீண்டும் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்! கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அதிசயம்!
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் 23 வயதுடைய தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளதோடு இவர்கள் அனைவரும் சிறந்த உடல் ஆரோக்கிய நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த மாதம் கண்டி போதனா வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழுந்தைகள் பிறந்த நிலையில் சில நாட்களின் பின் ஒரு குழந்தை இறந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக