புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாம்பு ஒன்றினை தன்னிடம் வழங்குமாறு கோரி பெண் ஒருவர் தொடுத்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தன்வசம் இருந்த நாக பாம்பை தெஹிவளை சரணாலயத்தில் ஒப்படைத்தமைக்கு எதிராகவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


நிமல் காமினி அமரதுங்க உள்ளிட்ட மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் குறித்த மனு நேற்றையதினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கொள்ளுபிட்டி இரவு களியாட்ட விடுதியொன்றில் நாக பாம்பை வைத்துக் கொண்டு நடனமாடியதாகக் கூறி பெண்ணொருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டு, அவர் வசம் இருந்த பாம்பு தெஹிவளை சரணாலயத்தில் விடப்பட்டது.

குறித்த பாம்பை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடும்படி கோரி நிரோஷா விமலரத்ன என்ற பெண் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை எதிர்வரும் 2013 மார்ச் மாதம் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நிரோஷா விமலரத்ன என்பவர் குறித்த பாம்பினை சில காலமாக காதலித்து வருவதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

தன் காதலனை மீட்கவே போராடி வருவதாக குறித்த பெண் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top