சுத்தமான 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடிய பக்டீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்போது திரவ தங்கத்தை உருவாக்கக் கூடிய "கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ்” என்ற பக்டீரியாவைக் கண்டுபிடித்தனர்.
இந்த பக்டீரியாவில் தங்க குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இதையடுத்து தங்க குளோரைடை இந்த பக்டீரியாவுக்கு உணவாக உட்செலுத்தினர்.
ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக(தங்கக் கட்டி) மாறியிருந்தது. அது 24 கேரட் தங்கத்தின் தரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட தங்கக்கட்டிகளைக் கொண்டு ஒரு கலைப்பொருளையும் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அதை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்று வரும் கலைப் போட்டியில் கண்காட்சிக்கு வைத்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக