புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வேலூர் மாவட்டம் திருவளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன். மனைவி வாணி (37). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர்.


இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (27) என்பவருடன் வாணிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இது கணேசனுக்கு தெரியவர, மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து 4 பிள்ளைகளுடன் கணவருக்கு தெரியாமல் வெங்கடேசனுடன், மணலி புதுநகர் வெள்ளிவாயல் சாவடிக்கு வாணி வந்துவிட்டார். அக்கம் பக்கத்தினரிடம், தனது மைத்துனர் என்று வெங்கடேசனை வாணி அறிமுகம் செய்திருந்தார். பிள்ளைகளும் வெங்கடேசனை சித்தப்பா என்று அழைத்து வந்தனர்.

இந்நிலையில், 8ம் வகுப்பு படித்து வரும் வாணியின் 2வது மகள் சுமதி (13), கடந்த 2 மாதத்துக்கு முன்பு திடீரென வாந்தி எடுத்தார். சுமதியை பரிசோதித்தபோது 2 மாத கர்ப்பம் என்பது தெரிந்தது.  கர்ப்பத்துக்கு காரணம் வெங்கடேசன் என தெரிந்ததும். வாணி அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவம் வெளியே தெரிந்தால் பிரச்சினையாகி விடும் என்று எண்ணிய வாணி, கருவை கலைக்க சுமதியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், ‘கருவை கலைக்க முடியாது' என்று டாக்டர் கூறிவிட்டார்.

இதையடுத்து தகவலின் பேரில் திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தினர் வந்து சுமதியை காப்பகத்துக்கு அழைத்து சென்று விட்டனர். பின்னர் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்து சுமதியின் கரு கலைக்கப்பட்டது. புகாரின் பேரில் வெங்கடேசனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

வெங்கடேசன் பிரபல வழிப்பறி கொள்ளையன். தினமும் இரவில் குடிபோதையில் வாணி வீட்டுக்கு வரும் வெங்கடேசன், சுமதியை பலாத்காரம் செய்துள்ளார் என விசாரணையில் தெரிந்தது. இதற்கிடையே தலைமறைவான வாணியை போலீசார் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top