சீனாவில் ஒரு மாத பச்சிளம் குழந்தையை விற்ற தந்தைக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்தவர் சுவோ(வயது 36). நகை வியாபாரம் செய்து வருகிறார்.
வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தவித்த சுவோ, தன் ஒரு மாத குழந்தையை 6 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டார். இதுகுறித்து சுவோவின் மனைவி பொலிசில் புகார் செய்தார்.
இதையடுத்து சுவோவை பொலிசார் கைது செய்தனர். குழந்தையை விற்ற குற்றத்துக்காக சுவோவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
தாயிடமிருந்து குழந்தையை பிரித்த குற்றத்துக்காக 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குழந்தை தற்போது தாயிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக