அமெரிக்காவில் உள்ள ஒக்லாமா என்ற இடத்தை சேர்ந்தவர் ஆஷ்லே. இவரது 3 வயது மகன் புல்லான் வார்டன். ஆஷ்லே தனது மகனை அழைத்து கொண்டு வெளியே சென்றார். அப்போது சிறுவனுக்கு திடீரென சிறுநீர் கழிக்கும் உணர்வு
ஏற்பட்டது.
எனவே அவசரமாக பேண்டை அவிழ்த்து தெருவிலேயே சிறுநீர் கழித்து விட்டான். அந்த ஊரில் தெருவில் சிறுநீர் கழிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். சிறுவன் சிறுநீர் கழிப்பதை போலீஸ்காரர் பார்த்து விட்டார். எனவே சிறுவனுக்கு ரூ.1 லட்சத்து20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அவன் சிறுவன் என்பதால் அவனது தாயார் இந்த பணத்தை கட்ட வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாயார் ஆஷ்லே கூறியதாவது:-
நான் என் மகனுக்கு ஒழுக்கங்களை சொல்லி கொடுத்து இருக்கிறேன். ஆனால் அந்த நேரத்தில் என்மகனுக்கு அவசரமாகி விட்டது. பக்கத்தில் கழி வறையும் இல்லை. வேறு வழி இல்லாமல் தான் இபபடி நேர்ந்து விட்டது. அபராதம் விதித்ததை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரபோகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக