புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவர், இறந்த உடலை தோளில் போட்டு கொண்டு வீதிகளில் நடந்து வந்தார். அதன்பிறகு வீட்டில் கொண்டு வந்து மனைவியின் உடலை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த சாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமய்யா(50). விவசாயி. இவரது மனைவி சன்னம்மா(45). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்
.

லட்சுமய்யாவிற்கு சொந்தமான நிலம் ஒன்றை சமீபத்தில் விற்றார். அதன்மூலம் கிடைத்த பணத்தை அவர் செலவழித்துள்ளார். இதை கண்டு அதிருப்தி அடைந்த மனைவி சன்னம்மா, அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் இருவரும் விவசாய நிலத்தில் வேலைக்கு சென்றனர். அங்கு இருவரும் பேசி கொண்டிருந்த போது, நிலம் விற்ற பணம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமய்யா, தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார்.

ஆனாலும் தனது ஆத்திரம் தீராத லட்சுய்யா, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பிறகு இறந்த மனைவியின் உடலை, தனது தோளில் போட்டு கொண்டு ஊர் வீதிகளில் நடந்து வந்தார். இதை கண்ட ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மனைவியின் உடலை வீட்டில் கொண்டு வீட்டிற்கு வந்து, அங்கே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சன்னம்மாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top