தனது சித்தியை கொடுமைப்படுத்திய தந்தையை 12 வயது சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்ஹால்
.
வீட்டில் ஷோபாவில் படுத்து தூங்கிய இவரை அவரது 12 வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். இதனையடுத்து, அச்சிறுவனை பொலிசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் இச்சிறுவன், தனது தந்தை மற்றும் சித்தியுடன் (மாற்றாந்தாய்) தங்கியிருந்தான். சித்தியையும், அவனையும் தந்தை ஜெய்ஹால் அடித்து உதைத்து கொடூரமாக நடத்தி வந்தார்.
எனினும் அவனது சித்தி பொறுமையுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், அவரை விவாகரத்து செய்ய ஜெய்ஹால் முடிவு செய்தார். இதை பொறுக்க முடியாத சிறுவன் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்றான்.
இந்த சம்பவத்தை நிகழ்த்த டி.வி. நிகழ்ச்சி தனது தூண்டுகோலாக இருந்ததாக அவன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.
டி.வி. நிகழ்ச்சியில் கொடூர தந்தையை மகன் கொலை செய்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்து தானும் அவரை கொன்றதாக பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவன் கூறினான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இச்சிறுவன் தனது 23 வயது வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக