பண்டாரகம நகரில் விட்டுச் செல்லப்பட்ட 10, 07 மற்றும் 04 வயதுடைய சிறுவர்கள்
பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (31) இரவு குறித்த சிறுவர்கள் பண்டாரகம நகரில் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவர்களில் தாய் அவர்களை வீதியில் விட்டுச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுவர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து குறித்த சிறுவர்கள் அவர்களின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.