மகாபாரதம் பகுதி-63
பதின்மூன்று ஆண்டுக்காலம் முடியும் நேரம் நெருங்கியதும் துரியோதனன் கலக்கம் அடைந்தான்.எப்படியாவது பாண்டவர்களைக் கண்டுபிடித்தால் அவர்கள் நிபந்தனையை நிறைவேற்றவில்லை என மீண்டும் வனவாசம்
அனுப்பி விடலாம் என எண்ணினான்.ஒற்றர்களை அனுப்பினான்..அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறைந்த சூரியன்போல் பாண்டவர்கள் வருவார்கள்..'என்றார் பீஷ்மர்.
அப்போது ஒரு ஒற்றன் புது செய்தி கொண்டுவந்திருந்தான்.விராட நகரில்..கீசகன் பெண் ஒருத்தியின் காரணமாக கந்தர்வனால் கொல்லப்பட்டான் என்பதே அச்செய்தி.
உடனே துரியோதனன்'அந்தப் பெண்..திரௌபதியே என்றான்.கீசகனைக் கொன்றவன் பீமனாகத்தான் இருக்க வேண்டும் என்றான்.பாண்டவர்கள் மாறு வேடத்தில் விராட நகரிலேதான் இருக்கிறார்கள்.
நாம் விராட நாட்டு மன்னனை முற்றுகையிட்டால்...அவனைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள்.கண்டுபிடித்து விடலாம்.மீண்டும்..நிபந்தனைப்படி பன்னிரண்டு காலம் வனவாசம் அனுப்பிவிடலாம்' என்றான்.
அப்போது..விராடனிடம் கொண்ட பழைய பகமைத் தீர்த்துக் கொள்ள இதுவே தருணம் என எண்ணிய..திரிகர்த்த நாட்டு மன்னன் சுசர்மா அவர்கள் உதவிக்கு வந்தான்.தெந்திசைத் தாக்குதல் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.வடதிசைத் தாகுதலை துரியோதனன் மேற்கொண்டான்.ஏற்கனவே கீசகனை இழந்து விராட நாடு வலுவிழந்திருக்கும் என துரியோதனன் எண்ணினான். முதலில் பசுக்கூட்டத்தை கவர்வது அவன் திட்டம்.அப்போது பசுக்களைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள் என்பது அவன் கணிப்பு.
போர் தொடங்கியது.
விராடனுக்கு உதவியாக அவனது சகோதரர்கள்..சதானிகன்.மதிராட்சன் ஆகியோரும் புறப்பட்டனர்.கங்கர்..தாமும் வல்லனும்,தாமக்கிரந்தியும்,தந்திரி பாலனும் உதவிக்கு வரலாமா? என்றார்.மன்னன் அனுமதித்தான்.ஆனால் மன்னன் சுசர்மா..விராடனை சிறைப் பிடித்தான்.விராடன் படை வீரர்கள் சிதறி ஓடினர்.அப்போது கங்கர்..வல்லனுக்கு சைகை செய்தார்.பீமன் உடன் ஆவேசத்துடன்..ஒரு மரத்தை வேருடன் பிடுங்கச் சென்றான்.கங்கர்..'இது பச்சை மரம்' என்றார்.(பீமன் தனது இயல்பான போர்முறையைக் காட்டக் கூடாது...சாதாரண வீரனைப் போல் போரிட வேண்டும்.ஏனெனில்..இன்னும் சில தினங்கள் அவர்கள் மறைந்திருக்க வேண்டியிருந்தது).பின் பீமன் ..வேறு முறையில் போரிட்டு சுசர்மனைத் தோற்கடித்தான்.விராடன் மீட்கப்பட்டான்.திரிகர்த்த நாட்டு மன்னனை கங்கர் மன்னித்து விட்டு விட்டார்.
ஆனால்...நாட்டின் வடக்குப் பக்க நிலை வேறாக இருந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக