வில்லன் நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நாயகனாக கலக்கியவர் நடிகர் சத்யராஜ்.
இவரது மகன் நடிகர் சிபிராஜ். இவர் ஸ்டூடண்ட் நம்பர் 1, 'ஜோர், 'கோவை பிரதர்ஸ்', 'நாணயம்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சிபிக்கும், ரேவதிக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது.
கர்ப்பமாக இருந்த ரேவதிக்கு நேற்று முன்தினம் பிரசவவலி ஏற்பட்டது.
உடனடியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததும் சிபி மருத்துவமனை ஊழியர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக