இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே கோலானி பாறக்கடவு பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த, பவானி, 62, பழைய இரும்பு பொருட்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இவரது மகன் செல்வம். மனைவி இறந்து விட்டதால் வேறொரு பெண்ணுடன் தமிழகத்தில் வசித்து வருகிறார். செல்வத்தின் முதல் மனைவியின் 13 வயது மகளை, பவானி வளர்த்து வந்தார். சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு, சிறுமிவந்தார். கடந்த மார்ச், 3ம் திகதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த பவானி தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்தார். தீ உடல் முழுவதும் பரவியதால் சிறுமி இறந்தார். தொடுபுழா பொலிசார், பவானியை கைது செய்து, காக்கநாடு சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக