புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் 10க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகிக்கு புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


ஹெனான் மாகாணத்தில் உள்ள யாங்செங் நகர கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் லீ ஜிங்காங்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஹெனான் மாகாண உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டில் 11 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் லீ கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த ஷாங்குய் நகர மத்திய நீதிமன்றம் லீக்கு மரண தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஹெனான் உயர் நீதிமன்றத்தில் லீ மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் லீக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், லீக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சாங்கிங்கின் பெய்பெய் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் லெய் ஜெங்ஃபு மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இணையதளத்தில் வெளியிடப்பட்ட பாலியல் தொடர்பான விடியோ காட்சியில் லெய் இடம்பெற்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சாங்கிங் மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top