விண்டோஸ் எக்ஸ்பிக்குப் பின்னர் மக்கள் பரவலாக ஏற்றுக் கொண்டு பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 7 மாறி வருகிறது.
இருப்பினும் சில விஷயங்கள் பல பயனாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அதில் ஒன்று இதன் தொடக்கத்தில் ஒலிக்கும் ட்யூனாகும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தொடங்குகையில், ஒரு வித சிக்னேச்சர் ட்யூன் என்று சொல்லப்படும் தொடக்க ஒலியைக் கொண்டிருப்பது வழக்கமாகும்.
விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு, விஸ்டாவின் தொடக்க ஒலியே தரப்பட்டுள்ளது. முதலில் இதனை மக்கள் விரும்பினாலும், பின்னர் இந்த ஒலியானது அவ்வளவாக வரவேற்கப்படவில்லை. எனவே இதனை நிறுத்த முடியுமா எனப் பலரும் அதற்கான வழியைத் தேடி வருகின்றனர். அவர்களுக்காக கீழே வழி தரப்பட்டுள்ளது.
கீழே தரப்பட்டுள்ள செட்டிங்ஸ் அமைப்பு விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் எக்ஸ்64 பயன்படுத்துபவர்கள் மேற்கொள்ள முடியாது. ஏனென்றால், இந்த செட்டிங்ஸ் அமைக்க Gpedit.msc என்ற பைலைத் திறக்க வேண்டும். இதனை ஹோம் பிரிமியம் எக்ஸ்64 சிஸ்டத்தில் திறக்க இயலாது. மற்றவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள வழியைப் பின்பற்றலாம்.
1. ரன் விண்டோவினைத் (Run Window) திறந்து, அதில் gpedit.msc என டைப் செய்து என்டர் தட்டவும்.
2. Computer Policy > computer configuration > Administrative Templates > System > Logon பின்னர் எனச் செல்லவும்.
3. Turn off Windows Startup Sound’ என்பதில் ‘Enabled’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Apply என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Home premium X64 பயன்படுத்துபவர்கள், கீழே தரப்பட்டுள்ள வழிகளைச் சற்றுக் கவனமாகக் கையாளவும். ஏனென்றால் ரெஜிஸ்ட்ரியில் சில மாற்றங்களை இதற்கென மேற் கொள்ள வேண்டும்.
1. ரன் விண்டோவில் regedit என டைப் செய்து ரெஜிஸ்ட்ரியைத் திறக்கவும்.
2. HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows > CurrentVersion > Authentication > LogonUI > BootAnimation என்றபடி செல்லவும்.
3. இதில் disable startup sound வேல்யூவினை 1 என மாற்றவும்.
இனி விண்டோஸ் 7 தொடங்குகையில் வழக்கமாகக் கேட்கும் ட்யூன் கிடைக்காது.