சாந்தை, பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், கனடாவில் சிறிது காலம் வாழ்ந்து பின்
சாந்தையில் வாழ்ந்து வந்தவரும், எல்லோராலும் ”ஐயா” என அன்பாக அழைக்கப் பெற்ற திரு. வேல்நாதன் சண்முகவடிவேலு அவர்கள்இன்று 15.03.2014 பண்டத்தரிப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிவபதமெய்தினார்.
அன்னார் காலம் சென்ற சண்முகவடிவேல் - நல்லபிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும்;
காலம் சென்ற இராசையா - தங்கமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்;
பாரிசாதமலர் அவர்களின் அன்புக் கணவரும்;
ரஜிவன், ரஜிதா, தர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்;
சிவகங்கை, சிவமங்கை, செந்தில்வேல், வேல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்;
ஜிவ்கான், கஜானன், ஜஸ்விக்கா ஆகியோரின் அன்பு பேரனாருமாவார்
அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்பெறும்
இத் துயரச் செய்தியினை உற்றார், உறவினர்கள், அயலவர்கள், ஊரவர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்து:
கருத்துரையிடுக