புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பூ’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பார்வதி மேனன். இப்படத்தை தொடர்ந்து ‘சென்னையில் ஒரு நாள்’
, ‘மரியான்’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் பார்வதி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான அதிர்ச்சி சம்பவத்தை கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் ஆண், பெண் பாகுபாடு பார்த்தது போதும். ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு போதிய விழிப்புணர்வை செக்ஸ் விஷயத்தில் ஏற்படுத்த வேண்டும்.

சிறுவயதில் சிலர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார்கள். பலவிதங்களில் இம்சை செய்திருக்கிறார்கள். அதை எதிர்க்கும் தைரியம் அப்போது எனக்கு இல்லை. நீங்கள் செய்வது சரியில்லை என்று நான் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கும்வரை அந்த தொல்லை எனக்கு நீடித்தது. அமைதியாக இருப்பதால் எந்த லாபமும் கிடையாது. மவுனத்தை கலைக்க வேண்டிய நேரம் இது.

இன்னமும் கூட சத்தமாக பேசுவதற்கு எனக்கு துணிவு வரவில்லை. ஏதாவது ஒரு விஷயத்தை பேச வேண்டுமென்றால் இப்போதுகூட எனது இதயம் படபடக்கவே செய்கிறது. உனக்கு நீயே கட்டுப்பாடு போட்டுக்கொள்ளாதே என்று இப்போதுகூட சிலர் எனக்கு அறிவுரை சொல்கிறார்கள். கல்விதான் எந்தவொரு குழந்தையையும் தனித்தன்மையை உணர வைக்கும் என்ற நம்புகிறேன் என்று பார்வதி கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top