புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்னொரு பெண்ணின் குழந்தையின் 82 படங்களை Facebook இலிருந்து திருடிய ஆசிரியர் ஒருவருக்கு 2 வருடத் தற்காலிகப் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் நியூபோட்டைச் சேர்ந்த இவர் தனது பாடசாலையின் புகழுக்குப் பங்கம் விளைவித்த காரணத்தினால் அவருக்கு நிர்வாகம் 2 வருடத் தடைவிதித்துள்ளது.

கெய்ரா என்ற குழந்தை தனக்குப் பிறந்த இரட்டையரில் ஒருவர் என்றும் இன்னொரு குழந்தை பிறந்ததுமே இறந்துவிட்டதென்றும் கூறி அந்த குழந்தைக்கு உரிமைகோரியிருந்தார்.
எனினும் இவ்வாறான புனைகதையை அவர் தனது ஆண் நண்பனுடன் 16 மாதங்களாக வைத்திருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரைப் பழிவாங்குவதற்காகவே உருவாக்கியிருந்தார் எனப்படுகின்றது.
Facebook   இல் பாடசாலை நண்பி ஒருவரை நண்பராக்கிக் கொண்டபோது அவர் தனது குழந்தையின் படங்களைக் காட்ட இவரும் தனது குழந்தையென இக்குழந்தையின் படங்களைக் காட்டியுள்ளார்.
இந்நண்பி இன்னொருவருக்கு அதைக் காட்டியபோது தான் அக்குழந்தையின் உண்மையான தாயாரைத் தெரிந்த அந்நபர் இவரைப்பற்றிக் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top