புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தொலைக்காட்சி பார்க்க விடாமல், விளையாட விடாமல் எந்த நேரமும் படிக்குமாறு நச்சரித்த தாய்க்குப் பாடம் படிப்பிக்க நினைத்த மகன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு விடையளிக்காமல் வெற்றுப் பேப்பரை மேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டு வந்த சம்பவமொன்று தென்னிலங்கையில் நடந்துள்ளது.சிறுவர்களின் அப்பட்டமான பிடிவாதத்தை எடுத்துக் காட்டும் இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;

கிராமப் பாடசாலையில் கல்வி பயின்ற சுனிமல் என்ற இந்தச் சிறுவன் படிப்பில் படு கெட்டி. எனினும் விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பொழுதுபோக்குகளிலும் அவனுக்கு வெகுவாக நாட்டம் இருந்தது.

ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்ததும் அவனது அம்மாவின் கெடுபிடி அதிகரித்தது. "ரீவி பார்க்காதே, விளையாடாதே படிபடி'' என நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.

பாடசாலை முடிந்ததும் அண்மையில் உள்ள நகரில் "ரியூசன்" வகுப்பு இரவுவரை. வீட்டுக்கு இரவில் வந்தால் சாப்பிட மட்டுந்தான் அனுமதி. ரீவியைத் தொடமுடியாது.

ஓய்வான நேரங்களில் நண்பர்களுடன் ஓடியாடி விளையாடவும் அனுமதியில்லை. இவ்வாறான கெடுபிடியை அடுத்தே சிறுவன் தான் நினைத்ததைச் செய்து முடித்துள்ளான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top