புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவின் பிரபல போப் பாடகியான லேடி ககா சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். நியூயார்க் நகரம்தான் என் கணவன் என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்க பாப் பாடகி லேடி ககா (25). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ‘த ஃபேம்’ என்ற தனது முதல் ஆல்பம் மூலமாக கிடுகிடு உயரத்துக்கு சென்றார். முன்னணி பாடகர்கள் வரிசையில் இருக்கிறார். 5 கிராமி விருதுகள் வென்றிருக்கிறார்.


சமீபத்தில் பிரித்தானிய இதழுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடம்பு நடுங்குகிறது. அப்போது நான் பள்ளிக்கூட மாணவி. 2001ம் ஆண்டு திடீரென எங்கும் புகை மூட்டம், பரபரப்பான சத்தம்.ஸ்கூல் மாடிக்கு ஓடிப்போய் பார்த்தோம். பதற்றமாக இருந்தது. இரட்டை கோபுர கட்டிடம் கண் முன்னே தகர்ந்து விழுந்தது. நியூயார்க் நான் பிறந்த ஊர். அந்த பாசம் எப்போதும் உண்டு.

உலக வர்த்தக மைய கட்டிடம் தகர்க்கப்பட்டதில் இருந்து அந்த பாசமும் நெருக்கமும் இன்னும் அதிகமாகிவிட்டது. நியூயார்க் நகரை என் கணவனாக கருதுகிறேன். எல்லா ஆல்பத்திலும் நியூயார்க் நகரை பற்றி ஒரு பாட்டாவது பாடிவிடுவேன்.

கடந்த மே மாதம் வந்த ‘பார்ன் திஸ் வே’ ஆல்பத்தில் நியூயார்க் என் கணவன் என்று வெளிப்படுத்தும் வகையில் ‘மேரி த நைட்’ என்ற பாட்டை பாடினேன். நியூயோர்க் நகரம் தான் தனது காதலன் என்று தெளிவாகக் கூறியுள்ளார் லேடி ககா

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top