புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகத்திலேயே மிக உயரமான நாய் ஒன்று அமெரிக்காவில் வளர்ந்து வருகின்றது. மிக உயரமாக வளரக்கூடிய நாய் இனம் ‘கிரேட் டேன்’. ஜெர்மன் மாஸ்டிஃப் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் அடிசன் நகரை சேர்ந்த ஆன் சப்லி என்பவர் வளர்த்து வருகிறார். ‘நோவா’ என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறார்.

உலகிலேயே மிக உயரமான பெண் நாய் என்று இது சமீபத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
ஏற்கனவே இந்த பெயரை பெற்றிருந்த நாய் இறந்துவிட்டதால், இந்த பெருமை நோவாவுக்கு கிடைத்துள்ளது.
மொத்தம் 5 அடி 11 அங்குலம் நீளம் இருக்கிறது. இதன் அப்பா, அம்மாகூட இந்தளவு நீளம் இல்லையாம். ‘‘வாரத்துக்கு 13 கிலோ உணவு சாப்பிடுகிறது. வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் தர்பூசணி வாங்கி தருவேன்.
ஆசையுடன் சாப்பிடும். 69 கிலோ எடை இருக்கிறது. குட்டியில் இருந்ததுபோலவே இப்போதும் கட்டிலில் என்கூடத்தான் படுத்து தூங்குகிறது’’ என்கிறார் ஆன் சப்லி. உண்மையிலேயே கொடுத்து வைத்த நாய் தான்....



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top