தாய்நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் அவசியமாகிறது. பொதுவாக பாஸ்போர்ட் வழங்க கடுமையான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. பாஸ்போர்ட்டில் தற்போது ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. திருநங்கைகள் என்ற பிரிவுக்கு தனிப்பட்ட முறையில் குறியீடோ அல்லது பிரிவோ இதுவரை நடைமுறையில் இல்லை.
இந்நிலையில் இங்கிலாந்தில் திருநங்கைகளுக்கென பிரத்யேக பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் பாலினத்தை குறிப்பிட ஆண், பெண் என்ற இரண்டு கட்டங்கள் மட்டுமே இருக்கும். இதனால், திருநங்கைகள் என்ற தனி பிரிவை குறிப்பிட ஏதுவாக விண்ணப்பத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்தக் கட்டத்தில் திருநங்கைகள், ‘எக்ஸ்’ என்று குறிப்பிட்டு பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேமுறை ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக