கல்யாணமாகிக் குழந்தைகள் பிறந்துவிட்டாலே டிரஸ்ஸிங்கில் கவனம் செலுத்துவதை மறந்துவிடுவார்கள் சில பெண்கள். ஏன் இப்படி இருக்கிறாய்? என ஃப்ரெண்ட்ஸ் யாராவது கேட்டாலும், இத்தனை வயசுக்கு அப்புறம் எதுக்குப்பா இதெல்லாம் என்று சுவாரசியமே இல்லாமல் பதில் சொல்வார்கள்.
வேலைக்குப் போகிற பெண்களே இப்படிச் சொன்னால் ஹவுஸ்
வொய்ஃப்களைப் பற்றிக் கேட்கத் தேவையில்லை. இவர்கள் பெரும்பாலான நேரங்களில் நைட் டிரஸ்ஸில் இருப்பதால் தங்கள் பர்ச்சேஸில் நைட்வேர்களுக்கு மட்டுமே இடம் தந்துவிட்டு,
பெரும்பாலான பணத்தை தங்கள் குழந்தைகளின் டிரஸ்ஸுக்காகச் செலவிடுவார்கள். இந்த அசிரத்தையான நினைப்பைத்தான் முதலில் மாற்ற வேண்டும். வீட்டில் இருந்தாலும் நம்மை நாம் பிரசன்டபிளாக வைத்துக் கொண்டால், நம்மையும் அறியாமல் நமக்குள்ளே உற்சாகம் பிறக்கும். நாம் அணிகிற ஆடைகள் நம் மனநிலையைப் பிரதிபலிக்கிறவகையில் இருக்க வேண்டும்.
ஆபீஸுக்குச் செல்கிறவர்கள் புரமோஷனைக் கொண்டாடவோ அல்லது சந்தோஷமான கெட் டுகெதராகவோ ஃப்ரெண்ட்ஸ் வீட்டில் சந்தித்துக்கொண்டால் அங்கே சந்தோஷ வெள்ளம் கரைபுரண்டோடும். மிகக் கச்சிதமான டிரஸ் செலக்ஷன் அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்கிவிடும். உங்கள் வீட்டுக்கு உங்கள் ஃப்ரெண்ட்ஸ் வருகிறார்கள் என்றால் அவர்கள் மட்டும்தான் அழகாக டிரஸ் செய்துகொண்டிருக்க வேண்டும் என்றில்லை. நீங்களும் ப்ளஸன்டாக இருப்பது அவசியம். நைட் டிரஸ்ஸைத் தவிர்த்து சிம்பிளான காட்டன் டிரஸ் அணியலாம். புடவைப் பிரியர் என்றால் அதிக சுருக்கங்கள் இல்லாத மிக்ஸ்டு காட்டன் வகையறாக்களை கட்டலாம். ஜிகுஜிகு புடவைகள் மற்றும் ஹெவி வொர்க் செய்யப்பட்ட ஃபேன்ஸி புடவைகளைத் தப்பித் தவறியும் கட்ட வேண்டாம்.
இயல்பாக உட்கார்ந்து பேச முடியாமல் புடவை மீது ஏதாவது சிந்திவிடுமோ, கறைபட்டுவிடுமோ என உங்கள் கவனம் முழுக்க இருக்கும். எடை அதிகமான புடவைகளையும் தவிர்க்க வேண்டும். சமைத்து முடித்த பிறகு உங்களை ரெஃப்ரஷ் செய்து கொள்ளுங்கள். சிம்பிளான மேக்கப் ஓகே. உங்களை இயல்பாகக் காட்டும் ஹேர் ஸ்டைலைத் தேர்ந்தெடுங்கள். ஃப்ரீ ஹேர் ஸ்டைலை நிச்சயம் தவிர்க்க வேண்டும். காரணம், சாப்பிடும்போது முடி உங்கள் முகத்தை மறைக்கும், முன்னால் வந்து விழுந்து தொல்லைப்படுத்தும். இதைத் தவிர்க்கப் பொருத்தமான ஹேர் ஸ்டைலைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
நீங்கள் உங்கள் ஃப்ரெண்ட் வீட்டுக்குச் செல்வதாக இருந்தால் எளிதான உடைகளை அணிந்து செல்லுங்கள். ரிங்கிள் ஃப்ரீ ஆடைகள்தான் இதுபோன்ற கெட் டுகெதருக்கு ஏற்ற சாய்ஸ். நீண்ட நேரம் உட்கார்ந்து அரட்டையடித்தாலும் கசங்காமல் பளிச்சென்று இருக்கும். ஃபேன்ஸி ரகங்களைத் தவிர்த்து சிம்பிளான காட்டன் சல்வாரை அணியுங்கள். மிக்ஸ் அண்ட் மேட்ச் வகையறாக்களையும் அணியலாம். அதிக இறுக்கமில்லாத தளர்வான ஆடைகள் உங்களை இயல்பாக வைத்திருக்கும். நண்பர்களோடு அதிக நேரம் செலவிடும் தருணங்களின்-போது, உங்க-ளின் டிரஸ் டிரெண்டியாக இருக்கிறதா என்பதைவிட உங்களுக்கு கம்ஃபர்-டபிளாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். கம்ஃபர்ட் லெவல் அதிகமாக இருந்தால்தான் உங்கள் சந்திப்பு கலகலப்பானதாக அமையும்.
ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட்டைத் தவிர்ப்பது நல்லது. அவை கேஷுவல் உடைகள்தான் என்றாலும் இதுபோன்ற சந்திப்புக்கு ஒத்துவராது. இயல்பாக தரையிலோ, சோபாவிலோ உட்கார்ந்து கால் நீட்டிப் பேச அவை தடையாக இருக்கும். சல்வார் அணியும்போது சத்தம் வரும் சலங்கைகள் பொருத்தப்பட்ட துப்பட்டாக்களைத் தவிர்ப்பது நல்லது. குர்தாவும் அணிந்து செல்லலாம். அதிக வேலைப்பாடு செய்யப்பட்ட குர்தாக்களைத் தவிர்த்து சிம்பிளாக காட்டன் குர்தாவில் செல்லலாம்.
அதிக ஆக்ஸசரீஸ் அணிய வேண்டாம். சிம்பிளான செயின் மற்றும் கம்மல் அணியலாம். புடவை அணிந்தால் ஹேங்கிங் கம்மலும் ஹூக் டிராப்ஸும் அணியலாம். குந்தன் செட்டும் அணியலாம். சல்வாருக்கு சின்ன கம்மலே போதுமானது. கையில் சிம்பிளான வளையல் மற்றும் பிரேஸ்லெட் அணிந்து செல்லலாம். கற்கள் பதித்த மற்றும் ஹெவி வொர்க் நகைகளை அணிவது அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாமல் உங்களைத் தனிமைப்படுத்திவிடும். அலங்காரமான ஹேர் கிளிப்புகளை விட பிளாக் மற்றும் பிரவுன் நிற ஹேர் கிளிப் மற்றும் ஹேர் பேண்டுகளைப் பயன்படுத்துங்கள். சலங்கைகள் பொருத்தப்பட்ட கிளிப் மற்றும் பேண்ட், மற்றவர்களின் கவனத்தைக் கலைக்கும் வாய்ப்பு இருப்பதால், சவுண்ட்லெஸ் பேண்டுகளைப் பயன்படுத்துங்கள்.
விரும்பினால் மேக்கப் போட்டுக்கொள்ளுங்கள். ஃபவுண்டேஷன் மட்டும் போதும். ஹெவி மேக்கப் போட்டால் வியர்க்கும்போது மேக்கப் கலைய வாய்ப்பு இருக்கிறது. ஐ லைனர் மற்றும் ஐ ஷேட் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும். பர்ஃப்யூமுக்குப் பதில் டியோடரண்டைப் பயன்படுத்துவது சூழ்நிலையை இயல்பாக்கும்.
நீங்கள் எத்தனைக்கு எத்தனை இயல்பான டிரஸ் அணிந்து இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் கெட் டுகெதர் இனிய அனுபவமாக இருக்கும். எந்தச் சந்திப்பையும் சூப்பராக்கும் சூட்சுமம் நம் கையில்தான் இருக்கிறது. ஜஸ்ட் என்ஜாய் இட்!
0 கருத்து:
கருத்துரையிடுக