சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள இவர், பின்னணி பாடகியாகவும் இருக்கிறார். தற்போது அருண் விஜய் உடன் தடையறத் தாக்க படத்தில் நடித்து வருகிறார். இவர்தான் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இவருக்கு புற்றுநோய் இருந்த்து. அதில் இருந்துதான் மீண்டு(ம்) நடிக்க வந்திருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறதா!
இதோ… அவர் சொல்வதைக் கேளுங்கள்.
வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. அதன் பெயர்தான் நம்பிக்கை. அது எனக்கு இருந்ததால் புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளேன். எனக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டதும் சிகிச்சை எடுத்தேன்.
இதனால் எனது அழகு மங்கியது. ஒரு நடிகைக்கு முக்கியமான தேவை அழகு. அது குறைய துவங்கியது. முடி கொட்டியது. இதனால் என் தலை முடியை குட்டையாக வெட்டிக் கொண்டேன்.
நோயில் இருந்து நிச்சயம் குணமாவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அதுவே என்னை காப்பாற்றியது. நான் லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறேன். பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதாலும் சத்தான உணவுகள் சாப்பிடுவதாலும் எனக்கெல்லாம் நோய் வராது என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அது பொய்யானது.
நானும் சாதாரண பெண் தான் என்பதை உணர்ந்தேன். இதுபோன்ற நோய்களில் சிக்கும்போது தைரியமாக இருக்கவேண்டும். தைரியம் இழந்தால் மீள்வது கஷ்டம். புற்றுநோய்க்காக பயப்பட வேண்டாம். சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் என்னைப்போல் பூரண குணமடையலாம். என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக