புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அண்ணன், தங்கை உறவு முறையுள்ள காதல் ஜோடியினர், காரைக்குடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.அவர்களை பிரிக்கும் முயற்சி பலனளிக்காததால் "டென்ஷனான' போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டலைச் சேர்ந்தவர் விஜய், 26 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எம்.சி.ஏ., பட்டதாரி. 
செக்காலை ரோட்டை சேர்ந்த மீனாகுமாரி, 24 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.பி.இ., படித்துள்ளார். இவரது தந்தையும், விஜய்யின் தந்தையும் சகோதரர்கள். அண்ணன், தங்கை உறவு முறையுள்ள விஜய்யும், மீனாகுமாரியும் பழகுவதை இருவரின் பெற்றோரும் கண்டு கொள்ளவில்லை.

இது அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். உறவு முறையை காரணம் காட்டி, தங்களின் பெற்றோர் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு விடுவர் என பயந்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்ய முடிவெடுத்தனர். சில வாரங்களுக்கு முன் வீட்டிலிருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை சென்றனர். அங்கு, யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க, மீனாகுமாரியின் கழுத்தில் தாலி கட்டியதோடு, தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இதற்கிடையில் இருவரின் பெற்றோர், பல இடங்களில் தேடியும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. காரைக்குடி போலீசில் மீனாகுமாரியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். விஜய்யின் பெற்றோரிடம் எஸ்.ஐ., ராஜசேகர் விசாரணை நடத்தியதில், அவர்கள் இருப்பிடம் தெரிய வந்தது.


போலீசில் தஞ்சம்: நேற்று, காதல் ஜோடி காரைக்குடி வந்தனர். அவர்களிடம், உறவு முறையை காரணம் காட்டி இருவரையும் பிரிக்கும் முயற்சியில், போலீசார் படாதபாடு பட்டனர். இதற்கு அவர்கள் உடன்படாததால், "டென்ஷனான' போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top