சீனாவில் நேற்று ஏற்பட்ட வெவ்வேறு வீதி விபத்துக்களில், 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வட சீனாவின் தைஞ்சின் துறைமுக நகரத்தின் பெருந்தெருவொன்றில், வேகமாக வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று காருடன் மோதியதில், பஸ்ஸில் பயணம் செய்த 35 மாணவர்கள்
பலியாகினர். இம்மாணவர்கள் விடுமுறை முடித்து பாடசாலைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இவ்விபத்தில் 19 பேர் காயமடைந்ததுடன், ஓட்டுனர் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போன்று சீனவின் கிழக்கு அன்ஹுய் மாகாணத்தில், பனிப்புகாரினால் 24 வாகனங்கள் தொடர்ச்சியாக மோதியதில் 10 பேர் பலியாகினர்.
ஹெனான் மாகானத்தில், வேன் ஒன்றுடன் ட்ரக் வண்டி ஒன்று மோதியதுல் 11 பேர் கொல்லப்பட்டனர். சீனாவில் கொண்டாடப்பட்டிருந்த நீண்ட விடுமுறையின் இறுதிநாளில் தத்தமது பணிவிடங்களுக்கு திரும்பிக்கொண்டிருந்தவர்களே பெரும்பாலும் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் வீதி விபத்துக்களில் சுமார் 100,000 பேர் வருடாந்திரம் இறப்பதாகவும், 500,000 பேர் காயமடைவதாகவும், ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:
கருத்துரையிடுக