சோமாலியாவில் வெடிகுண்டு நிறைக்கப்பட்ட கார் வெடித்துச் சிதறியதில் 65 பேர் பரிதாபமாக பலியாகினர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவில் உள்ள அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சரகம் முன்பு வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட கார் ஒன்று வெடித்துச்
சிதறியது. இதில் அப்பகுதியிலிருந்தவர்களில் 65 பேர் பரிதாபமாக பலியானார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலத்த பேர் காயம் அடைந்தனர்.
அமைச்சரக கட்டிடத்துக்குள் திடீரென நுழைந்த காரைக் காவலுக்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அந்த காரை சோதனை சாவடி இருக்கும் இடத்துக்குச் சோதனை செய்வதற்காக கொண்டு வருமாறு காவல்துறையினர் ஓட்டுனரிடம் அறிவுறுத்தினர். அவ்வேளையில் காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக