மகியங்கனை ஊவதிஸ்ஸபுர பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.தனது மனைவியை கத்தியால் தாக்கியுள்ள கணவர் பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதலில் மனைவியின் தாயாரும் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர் கவலைக்கிடமான நிலையில் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் மகியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக