புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.நா. தினம் ஆண்டுதோறும் அக். 24ல் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. அமைப்பின் நோக்கம் சாதனை எதிர்காலத் திட்டம் போன்றவற்றை மக்களிடம் சேர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம். முதல் உலகப் போர் நடந்த போது அது போல் மீண்டும் ஒரு பயங்கரம் நடக்கக் கூடாது என உலக நாடுகள் எண்ணின.

அதற்காக உலக நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க முயற்சித்தனர் அது தோல்வியில் முடிந்தது. அதன் பின் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு உலகில் பேரழிவை ஏற்படுத்தியது.

 "இனி இன்னொரு போர் உலக நாடுகளிடையே ஏற்பட்டுவிடக் கூடாது. உலகில் அமைதியும் சமநிலையும் ஏற்பட வேண்டும்' என்பதற்காக 1945 ஏப். 25 மற்றும் ஜூன் 26ல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உலக நாடுகளின் கூட்டம் நடந்தது. அதன் விளைவாக ஐ.நா. சபை 1945 அக்.24ல் தோற்றுவிக்கப்பட்டது.

இச்சபை முறைப்படி செயல்படத் துவங்கிய அக்.24 ஐ.நா. தினமாக அறிவிக்கப்பட்டது. 51ல் இருந்து 193அமைதியை விரும்பும் எந்த நாடும் இதன் உறுப்பினராகச் சேரலாம். ஐ.நா. தொடங்கப்பட்டபோது 51 உறுப்பு நாடுகள் இருந்தன. தற்போது 193 நாடுகளாக உயர்ந்துள்ளன.

ஐ.நா. வின் நிரந்தர உறுப்பு நாடாக அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் உள்ளன. நிரந்தரமாக இல்லாத நாடுகளில், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் ஒப்பந்த அடிப்படையில் நிரந்தர உறுப்பினராக உள்ளது. ஐ.நா. வின் அலுவலக மொழிகளாக ஆங்கிலம், சீனம், அரபி, பிரஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகள் உள்ளன.

5 ஆண்டுக்கு ஒரு முறை உலகில் உயர்ந்த பதவியாக ஐ.நா. வின் பொதுச்செயலர் பதவி கருதப்படுகிறது. இந்த அமைப்புத் தொடங்கிய 60 ஆண்டுகளில் இதுவரை 6 பேர் அதன் பொதுச் செயலர்களாக இருந்துள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஒருவரே இருமுறை இப்பதவியை வகிக்கிலாம்.

அந்த வகையில் இதுவரை பதவி வகித்த அனைவரும் இருமுறை பதவி வகித்துள்ளனர். தற்போதைய ஐ.நா. பொதுச்செயலராக அமெரிக்க ஆதரவு நாடான தென்கொரியாவைச் சேர்ந்த பான்-கீ-மூன் 2வது முறையாக நீடிக்கிறார். உலக நாடுகளிடையே அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் ஐ.நா. துவங்கப்பட்டது. இன்று இந்த அமைப்பு வல்லரசு நாடுகளின் பிடியில் உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top