புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

thumbnailபக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் சிலர் மிருக வதையை எதிர்த்து தங்கள் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.பக்ரீத் பண்டிகையின் போது,ஒட்டகம்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை
அறுக் கும், "குர்பானி'என்ற சடங்கு நிறைவேற்றப்படுவது வழக்கம். பாகிஸ்தானில் இது அதிக எண்ணிக்கையில் நடக்கும். கடந் தாண்டு, மிருக வதை தடுப்பு அமைப்பு ஒன்று, பாகிஸ்தானில் மிருக வதையைத் தடுக்க ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது.

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர், மிருகங்களை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத் துக்களை பிரசாரம் செய்து வருகின்றனர். பினா அகமது மற்றும் பரா கான் இருவரும் இதுகுறித்து தங்கள் வலைப்பூவில் எழுதியிருப்பதாவது: குர்பானியின் தத்துவம் நாம் அறிந்தது தான். நமது மதச் சடங்குகளை பண்பாடு, மத ரீதியில் அறிவியலோடு சேர்த்து நடத்த வேண்டும்.

கடவுளின் படைப்புகளான இந்த மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருப்பதையும், சுற்றுச்சூழலுக்கு இதனால் எவ்வளவு கேடு ஏற்படுகிறது என்பதையும், மனித உடலுக்கு அசைவ உணவு எவ்வளவு கேடுகளைத் தருகிறது என்பதையும், அசைவ உணவு குறித்து இஸ்லாம் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்; பரிசீலிக்க வேண்டும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top