புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகை மனோரமாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை மனோரமா கடந்த மாதம் குடும்பத்துடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தார்.
அப்போது, அங்குள்ள விருந்தினர் இல்லத்தில்
தங்கினார். அப்போது அவர் குளியல் அறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்தார். அவருடைய தலையில் அடிபட்டது. அதற்கு மனோரமா சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், தைலத்தை தேய்த்துக்கொண்டார். சென்னை திரும்பிய அவர், வழக்கமான வேலைகளில் ஈடுபட்டார். சில தினங்களுக்கு முன், தலையில் அடிபட்ட இடத்தில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அடிபட்ட இடத்தில் அவருடைய தலைக்குள் ரத்தம் உறைந்திருந்ததை கண்டுபிடித்தார்கள். அதைத்தொடர்ந்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். இந்நிலையில் மனோரமா நினைவாற்றலை இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரை பார்க்க, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top