அதிவேக பொருளாதார வளர்ச்சியின் மூலம் உலக நாடுகளை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள சீனாவில் குடும்ப கலாசாரம் குறைந்து வருகிறது. ஆம்... தினமும் 10,000 ஜோடி விவாகரத்து பெறுவதாக புள்ளி விவரம் கூறுகிறது.கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்தம் 28 லட்சம் ஜோடி விவாகரத்து கோரி
விண்ணப்பித்துள்ளதாக சீன உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இது கடந்த ஆண்டைவிட 12 சதவீ தம் அதிகம். அதாவது, தினமும் 10 ஆயிரம் ஜோடி விவாகரத்து கோருகின்றனர். சீனாவில் விவாகரத்து பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 7 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. எனினும், பெய் ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முதல்நிலை நகரங்களில் இது 30 சதவீதமாக உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக