புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியைச் சேர்ந்த வாலிபர்களிடமிருந்து சுமார் 15கிலோ எடை உள்ள தங்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தங்கம் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு:
.
கடலோர பகுதிகளில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து திருச்சி மற்றும் நாகை மாவட்டம் சுங்கத்துறையினர் இணைந்து கடலோர பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேளாங்கண்ணியிலிருந்து சென்னையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த காரை மறித்து சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 8 பெட்டிகளில் 160 தங்க பிஸ்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரில் பயணம் செய்த ஆனந்த் மற்றும் வேதய்யன் ஆகிய 2 வாலிபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

சுமார் 15 கிலோ எடையுள்ள இந்த தங்க பிஸ்கட்டுகளை கோடியக்கரையிலிருந்து அவர்கள் சென்னைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர்களை கைது செய்த அதிகாரிகள் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top