புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்று 11-11-11. இது மிகவும் அபூர்வ தினமாகும். தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றில் 1ம் எண் வருவது மிகவும் சிறப்பு. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்ற அபூர்வ தினம் வரும். கடந்த நூற்றாண்டில் 11-11-1911ல் அதிர்ஷ்ட நாள் வந்தது. இதற்கு முன்பு 11-11-1111 என்ற நாள் வந்த போது
மிகவும் அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. இதில் 6 முறை 1ம் எண் வந்துள்ளது. இதுவே 800 ஆண்டுகளுக்கு முன்பு வந்த 11.11.1111 என்ற நாள் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக கொண்டாடப்பட்டது.

இது போன்ற 1ம் எண் கொண்ட நாள் வருவதால் இந்த ஆண்டு கிரண ஆண்டு என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 4 சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் நிகழும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். இனி ஒரே ஆண்டில் 6 கிரகணங்கள் தெரிவது என்பது 2041 ஆண்டில் தான் தெரியுமாம். 11 என்ற எண் சிறப்பான கணித தன்மையை குறிக்கிறது. எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த தினத்தில் பெற்றெடுக்க தவமாக காத்து இருக்கின்றனர்.

இந்த தினத்தை ஒவ்வொரு நாட்டிலும் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் தனித்திறன் கொண்ட நாளாகவும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் முக்கியமாக நினைவில் கொள்ளும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் இன்றைய தினத்தில் காலை 11 மணி அளவில் அந்தந்த நாடுகளின் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் மவுனம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்கநாளில் திருமணம் செய்து கொள்ளுதல், பொருட்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துதல், முக்கியமான திட்டங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகளும், விழாக்களும் நடக்கின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top