புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


  பிளாஸ்டிக் போத்தலின் பயன்பாடு உலகமெங்கும் பெருமளவில் வியாபித்து விட்ட நிலையில் ,  சத்தமில்லாமல் நைஜீரியாவில் பிளாஸ்டிக் போத்தலைக்  கொண்டு ஒரு வீடி கட்டி இருக்கிறார்கள் . நைஜீரியாவின் சாலைகளிலும் ,  நீர் ஆதாரங்களிலும் நிறைந்து இருந்த பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு இந்த வீடு
கட்டப்பட்டுள்ளது .   58 Sqm ( 624 சதுர அடி ) யில் அமைந்துள்ள இந்த வீட்டில் இரண்டு படுக்கை அறைகள் உள்ளது .

பிளாஸ்டிக் போத்தல்களின் உள்ளே மணல் நிரப்பும் போது கிடைக்கும் கிட்டத்தட்ட 3 கிலோ எடையுள்ள போத்தல்கள் இந்த வீடு கட்ட உபயோகப்படுத்தப்பட்டுள்ளது .  இரண்டு அடுக்குகளாக வைத்து இந்த  போத்தல்கள் சிமெண்ட் வைத்து கட்டப்பட்டுள்ளது .பல வண்ணங்களில் உள்ள போத்தலின் மூடிகள் வீட்டின் உட்புறத்தில் தெரியும் படி அமைக்கப்பட்டுள்ளதால் அலங்காரமான் உள்ளறைகளை காண முடிகிறது .   பூமி அதிர்ச்சி , தீ போன்ற ஆபத்துகளில் இருந்து இந்த வீடு தப்பும் என்றும் 19 டிகிரி வெப்பம் மட்டும் வீட்டின் உள் காணப்படும் எனவும் இதை வடிவமித்தவர் தெரிவித்துள்ளார் .

மண்ணில் வீசப்படும் இந்த பிளாஸ்டிக் போத்தல்கள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகும் என்பதால் இவற்றை இப்படி பயன்படுத்துவது வரவேற்கப்பட வேண்டும் என்றும் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார் .  70  சதவீத வீட்டு வேலை முடிந்துள்ள நிலையில் 14000 பாட்டில்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறதாம் .   இந்த வீட்டின் மின்சார தேவை சூரிய ஒளியில் இருந்து சந்திக்கப்படும் எனவும் தெரிகிறது .  இந்த நிலையில் 200000 பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்தி நைஜீரியாவில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டவும் இதை வடிவமைத்தவர் தீர்மானித்துள்ளது ஒரு கூடுதல் தகவல் .



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top