புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தான் பெற்ற குழந்தையை தாய் ஒருவர் யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டிப் புதைத்த சம்பவம் ஒன்று யக்குரே, நுவரகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பிரதேச வாசிகளினால் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்த
பொலிஸார் தாயினை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 32 வயதான தாய் பொலிஸாரிடம் தனது வாக்குமூலம் கொடுத்துள்ளார். கடந்த 6ம் திகதி அன்று எனது வீட்டில் வைத்து எனக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதிகாலை இரண்டு மணி அளவில் குழந்தை பிறந்தது.

குழந்தை சத்தமின்றி எதுவித அசைவுகளும் இன்றியே பிறந்தது. அதனால் அன்றைய தினம் காலை 8 மணிக்கு வீட்டின் பின்புறம் குழிதோண்டி குழந்தையை புதைத்து விட்டேன். தாயினால் படுகொலை செய்யப்பட்ட சிசு ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரலகங்வில பொலிஸார் புதைக்கப்பட்ட குழந்தையை இன்னும் தோண்டி எடுக்கவில்லை. எனினும் குழந்தை புதைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top