யாழ். நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த நான்கு வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை யாழ். பொலிஸார் தேடிவருகின்றனர்.நேற்று காலை குறித்த வீட்டில் இருந்த தாயார் பலசரக்கு கடையொன்றிற்குச் சென்றிருந்த வேளை, அப்பகுதி
வீதியால் சென்று கொண்டிருந்த 40, 45 வயது மதிக்கத்தக்க நபர் வீட்டுக்குள் வலுக்கட்டயமாக புகுந்து நான்கு வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
சிறுமியின் தாயார் வீடு திரும்பிய போது சிறுமியின் உடல் இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்டதால் மகளுக்கு என்ன நடந்தது என வினவியுள்ளார்.
குறித்த சிறுமி தனக்கு நடந்ததை தாயாரிடம் கூறியதும் தாயார் உடனடியாக யாழ். போதனா வைத்திசாலையில் சிறுமியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சந்தேகநபரை தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக