புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மரபணு மாற்று விஞ்ஞானம் மருத்துவ உலகை புரட்டிப்போட வைத்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மனிதனுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்க ஆன்டிபயாடிக்’ (நோய் எதிர்ப்பு) மருந்துகளை அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.அடுத்த கட்டமாக நோய்க்கு மூலகாரணமாகத் திகழும் மரபணு என்ன என்பதை கண்டறிந்து அவற்றை சரிசெய்வதால்
நோயை முழுமையாகக் குணப்படுத்தி விடலாம் என்கிறார் பிரபல குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கரி.

அவர் மேலும், ’’பரம்பரை காரணமாக வரும் நீரிழிவு, ரத்த அழுத்த நோய், மனநோய் போன்றவற்றையும் மரபணு சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தி விடலாம்.இளமை மரபணு மனித மரபணு மிகப்பெரிய அதிசயம். இதன் மூலம் மருத்துவ உலகில் ஏராளமான அதிசயங்களை நிகழ்த்த முடியும்.

மனிதனின் பருவ மாற்றத்தை, நிர்ணயிப்பதும் மரபணுதான். அந்த மரபணுவையும் கண்டறிந்து திருத்தி விட்டால் மனிதன் இளமையைக்கூட தக்க வைத்துக் கொள்ள முடியும்.இதற்கான ஆய்வில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது பெரும்பாலான பேர் தவறான உணவுப்பழக்கம், மது, போதைப் பழக்கம் காரணமாக சில உடல் உறுப்புகளை இழந்து தவிக்கிறார்கள்.

சமீப காலமாக சிறுநீரகம் பழுதடைந்த பலர் மாற்று சிறுநீரகம் கிடைக்காமல் உயிரை இழக்கிறார்கள். இதனால் விஞ்ஞானிகள் மனித மரபணுவை பன்றி போன்ற விலங்குகளின் மரபணுவில் சேர்த்து புதுவகையான மனிதத் தன்மையுடைய விலங்குகளை உருவாக்குகிறார்கள்.

பின்னர் அந்த விலங்குகளில் உள்ள சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை அகற்றி, அதை சிறுநீரக நோயாளிகளுக்கு பொருத்தினால், அவர்கள் முழுமையாக குணம் அடைவார்கள்.மருத்துவ உலகம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. மரபணுவில் நிறைய அதிசயங்கள் இருப்பது போல் புரியாத புதிர்களும் உள்ளன.

அவற்றைப் போக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். மரபணு சிகிச்சை முறை வெற்றி பெற்றால் மருந்து, மாத்திரைகளுக்குகூட நாம் விடை கொடுத்து விடலாம்.
மருத்துவ துறையில் இந்த நூற்றாண்டு மரபணு நூற்றாண்டு என்றே வர்ணிக்கலாம்’’ என்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top