எமது இந்த பிரபஞ்சம் மிகவும் விசாலமானது. இது பல பில்லியன் நட்சத்திர மண்டலங்களைக் கொண்டது. நாம் பால்வெளி என்னும் நட்சத்திர மண்டலத்தில் சூரிய குடும்பத்தில் இருக்கிறோம். இங்கு சூரியனைப் போன்று 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன.இவை ஒவ்வொன்றும் பல
ஒளியாண்டு தொலைவில் உள்ளன. ஒரு ஒளி ஆண்டு என்பது 180000×1.6x3600x24x365 கிலோ மீற்றர் தொலைவாகும்.
எமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் குறுக்களவு 50,000 ஒளியாண்டுகளாகும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
எனவே நாம் பிரபஞ்சத்தில் பிரயாணம் செய்வதென்றால் ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் செல்ல முடியாது.
ஒளியின் வேகத்தில் சென்றால் செல்லும் பொருள் அதனுடைய உருவில் இருக்க முடியாதென பிரபல ஆய்வாளரின் கோட்பாடு ஒன்று கூறுகிறது.
இவ்வாறு பிரபஞ்சத்தில் நாம் பிரயாணம் செய்தால் எமது சூரிய மண்டலம் எவ்வாறு தோன்றும் என்பதனை அவுஸ்திரேலியாவின் பௌதீக விஞ்ஞானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக