நாட்டிலிருந்து சட்டவிரோதமாக ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களை கடத்திச்செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.30 இலட்சத்து 94 ஆயிரம் ரூபா பெறுமதியான ஜப்பானிய யென்களை சந்தேகநபர் பயணப் பொதியில் மறைத்து வைத்து வெளிநாட்டிற்கு
கடத்திச்செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் ஹொங்கொங் நோக்கி பயணிப்பதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக விமானநிலைய சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டனர்.
இதேவேளை சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை இந்தியாவிற்கு கடத்த முற்றபட்ட ஒருவர் விமானநிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 50 ஆயிரம் ரூபா அபராதத் தொகையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக