புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


முன்னாள் உலக குத்துச் சண்டை வீரர் ஜோ பிரேசியர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 67. அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பிலாடெல்பியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் உயிர் பிரிந்துள்ளது. இந்த தகவலை அவரது உதவியாளர்  லெஸ்லிவுல்ப் தெரிவித்துள்ளார்.
1970 முதல் 1973 வரை 4 முறை உலக குத்து சண்டை சாம்பியன் பட்டம் வென்றவர் ஜோ பிரேசியர். 1971 இல் பிரபல குத்து சண்டை வீரர் முகமது அலியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிபிடத்தக்கது.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top