உங்களில் எத்தனை பேருக்கு நடனம் ஆடத்தெரியும். நீங்கள் ஒரு இளைஞர் அல்லது யுவதியாக இருந்தால் முடியும் என்று பதில் கூறுவீர்கள்.இதே கேள்வியை உங்கள் வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டியிடம் கேட்டுப்பாருங்கள் என்னால முடியாதுடா ராசா என மறுத்துவிடுவார்கள்.
ஆனால் இந்த காணொளியில் ஒரு பாட்டி ஆடும் நடனத்தை பாருங்கள். நடப்பதற்கு கூட தென்பில்லாத இந்த பாட்டியின் வயது என்ன தெரியுமா? 95 வயது. ஆம் இந்த தள்ளாத வயதிலும் டப்பாங்கூத்து ஆடுகிறார் இந்த பாட்டி.
மரண வீடு ஒன்றிலே இவ்வாறு மழைத்தூறல் என்றும் பார்க்காது அசத்தலாக ஆடுகிறார் இந்த 95 வயது பாட்டி. ம்ம்.. நீங்களும் தான் பாருங்களேன் பாட்டியின் பலே நடனத்தை.
0 கருத்து:
கருத்துரையிடுக