புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

செக்குடியரசு நாட்டை சேர்ந்தவர் காரெல் அபெலோவஸ்கி (51). இவர் ஸ்பெயின் நாட்டுக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் ஒரு பிளாஸ்டிக் கன்டெய்னரை அதே விமானத்தில் எடுத்து வந்தார்.அந்த விமானம் வழியில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்ஏர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் நின்றது. அப்போது அவர் கொண்டு வந்த பிளாஸ்டிக் கன்டெய்னரை சோதனையிட முடிவு செய்தனர். இதற்கு காரெல் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே எக்ஸ்ரே ஸ்கேனர் மூலம் சோதனையிடப்பட்டது.

அப்போது அந்த பிளாஸ்டிக் கன்டெய்னருக்குள் 250 கொடிய விஷப்பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை தவிர அரியவகை பல்லிகள், சிலந்திகள் மற்றும் நத்தைகளும் இருந்தன.

அவற்றில் பல்லிகள் மெக்சிகோவில் இருந்தும், பாம்புகள் உள்ளிட்ட மற்றவை தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள வடக்கு அர்ஜென்டினா, பராகுவே மற்றும் பிரேசில் நாடுகளில் இருந்தும் கடத்தி வரப்பட்டவை என தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ரூ.125000க்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

கொடிய விஷப்பாம்புகள் போன்றவற்றை பயணிகள் விமானத்தில் எடுத்துவர அனுமதி இல்லை. அவை பயணிகளை கடித்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதால் அவற்றை எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top